Monday, November 24, 2008

(அ) நாகரிகம்


மணி : 12.30

இடம்: அண்ணா சாலை பஸ் நிறுத்தம்.

நாகரிக சாயல் வித்யாவின் உடலிலும், உடையிலும் தெரிந்தது...

டி-ஷர்டும்...லோ ஹிப் ஜீன்சும்...ரிபோக் சூ சகிதமாக மொத பஸ் நிலையத்தில் தனி ஆளாய் தெரிந்தாள்.

"என்ன ஒரு ஆட்டோ கூட காலியா வரமாடேங்குதே " என்று சலித்துக் கொண்டே கை கடிகாரத்தை பார்த்தவள் 10 நிமிடம் கரைந்த்திருந்த்தை உணர்ந்ததாள்.

"நீங்க கேட்ட புத்தகத்த பாண்டி பஜார் பிரான்சில எடுத்து வெக்கிறோம், ஆனா சரியா 1 மணிக்கு கடைய சாத்திடுவோம்மா" என்று கடைக்காரன் தொலைப்பேசியில் சொன்னது நினைவில் வந்தது.

யோசித்துக் கொண்டே நின்றவள் எதிரில் அவளுக்காகவே வந்ததுப் போல்..."பாரிஸ் டு பாண்டி பஜார்" என்ற பலகையுடன் பல்லவன் பல் இளித்தது.

"பஸ்ஸிலயாவது போயிறலாம்" என்று எண்ணிக்கொண்டே வேகமாய் பல்லவனில் தஞ்சம் அடைந்தாள். ( ஏரியபின் தான் உணர்ந்தாள் உட்கார இடம் இல்லை என்று)

"ஒரு பாண்டி பஜார் கொடுங்க" என்று டிக்கெட்டை வாங்கியவள் பஸ்சின் பின் பக்கம் ஓரமாய் ஒதுக்கி நின்றாள்.அவள் நின்ற இடத்தின் அருகில் இருந்த இருக்கையில் நடுத் தர வயது ஆசாமி ஒருவர் அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதை கவனித்த வித்யாவிற்கு ஒன்றும் வித்யாசம் தெரியவில்லை... அவளது கவனம் எல்லாம் எப்போது பாண்டி பஜார் வரும் என்றிருந்தது.

தேனாம் பேட்டை பஸ் நிறுத்தத்தில் இன்னும் சிலர் தம் பங்கிற்காய் பல்லவனில் இடத்தை நிரப்பிக்கொண்டிருந்தனர்.பஸ்சின் இடப் பற்றாக்குறையால் தன் கையை உயர்த்தி மேல் இருந்த கை பிடியை இருக்கப் பற்றினாள்.

அது வரை மறைந்திருந்த... வளைக்கப்பட்ட அவள் இடுப்பிற்கு திறப்பு விழா செய்யப்பட்டது.

ஏனோ எதோசையாய் மீண்டும் அந்த நடுத்தர வயது மனிதரை பார்த்தாள்.அவரது கண்கள் அவளது இடுப்பில் மையம் கொண்டிருந்தது அவளுக்குப் புரிந்தது.

"என்ன ஜென்மமோ, இதுக்கு முன்னாடி பொன்னையோ இடுபையோ பாத்ததில்லை" என்று கருவிக் கொண்டே நின்றாள்.

அந்த ஆசாமியோ நானும் கை பற்றும் வரை விடுவதாய் இல்லை என்ற குறிக்கோலோ ... பதித்த பார்வை மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

வித்யாவின் கோபம் அவள் மண்டைக் கேறியது."இவங்களை எல்லாம் பொண்ணுக்க இல்லாத ஊருக்கு நாடுகடத்தனும், கண்ணை ரெண்டும் பிடுங்கி கையில கொடுக்கணும்" என்று சபித்துக் கொண்டே நின்றிருந்தாள்.

"பாண்டி பஜார் வருது பாருங்க ... வர ஸ்டாப்புக்கு மேல வண்டி போகாது " என்று சொல்லிக் கொண்டே அங்கு வந்த கண்டெக்டர்.அந்த நடுத்தர வயது மனிதரை பார்த்து...

" ஏம்பா கண்ணாயிரம் பாண்டி பஜார் வந்துறிச்சிப்பா... எதோ உன்னை எனக்கு தெரிஞ்ச்சதால... கண்ணு தெரியாதே பாவம்னு பத்தரமா எறக்கி வுடுறேன்... எத்தன மொற சொல்றது யாரையாச்சும் தொணக்கி கூட்டியான்னு" சொல்லிக்கொண்டே அவர் கையை பிடித்து இறக்கி விட்டார்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வித்யாவிற்கு... மணி 12.58 ஆனது கூட கவனிக்கத் தோன்றாமல் தன் அறியாமையை நினைத்து கடிந்துக் கொண்டே அவரை நெருக்கிக் கேட்டாள்...

"ஏன் சார் இங்கிருந்து உங்களுக்கு எங்க போகணும்"


முற்றும்.


ஒவ்வொரு ஆணின் வாழ்விலும் பெண் என்பவள் எதோ ஒரு வகையில் தனக்கான இடத்தை பெற்றிருப்பாள். தாயாகவோ, தமக்கையகவோ, மகளாகவோ... இப்படிபட்ட எதோ ஒரு பரிமாணத்தில் இச்சை இல்லா ஒரு உறவு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இயற்கையாய் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இதை எங்கள் வர்க்கம் பல முறை மறந்திருகிறது.

அழகை ரசிப்பது தவறில்லை,ரசனையாக மட்டும் இருந்தால்...

ரசனைக்கு அப்பாற்பட்ட மிருகப் பார்வை தவறானது.காதலுக்கும், காமத்திற்கும் எவ்வளவு வித்யாசம் இருக்கிறதோ...அவ்வளவு வித்யாசம் ரசனைக்கும், இச்சைக்கும் இடையில் இருக்கிறது. இதை என்று உணரப் போகிறோம். ஆதலால் என் இன வர்கமே...(ஒரு சில ஆண் வர்கமே) உன் பார்வையை மாற்று.

உலக விஞ்ஞானம் ஆயிரம் மடங்கு உயர்ந்தாலும், வாழ்க்கை தரம் பல்லாயிரம் கட்டங்கள் கடந்தாலும்... பெண்மைக்கான அழகு வர்ணனைக்கும் மேலான ஒன்று.

"அடுப்படியில் இருந்த பெண்கள் எல்லாம்

அடிமை விலங்கை உடைத் எரிந்து

சுயமாய் இடுக்கை இடும் காலம் வந்ததில்

பெரு மகிழ்ச்சி எனக்கு"


காலத்தால் மாற்றப்பட்ட செயல்கள் எவ்வளவோ இருந்தாலும் பெண்மைக்கான குணமும் இயல்பும் இயற்கையால் கொடுக்கப்பட்ட ஒன்று. இதை மறந்த பெண்கள் எல்லாம் நாகரிகம் என்னும்... கலாச்சாரங்களை கடந்த சீர்கேட்டிற்கு அடிமையாக்கப்பட்டு சிதைந்துக் கொண்டிருக்கிறாகள். நாகரிகம் வளர வளர உடுக்கும் உடையின் நீளம் குறைந்துக்கொண்டிருக்கிறது என்பது மனதை பாதித்த ஒன்று. இதன் விளைவு... விவரிக்க முடியாத சூழல்கள் பெண்மையை சிதைத்துக் கொண்டிருக்கிறது.

பெண்டிரே...
"பெண்மையை படையலிடாமல், பட்டியில் இடுங்கள்".


"மானுடமே எதை நோக்கி உன் பயணம்
செய்ய வேண்டியத செய்ய மறந்தாய்
செய்ய கூடாததை
செய்துக் காட்டினாய்
விளக்கம் கேட்டால்
இது "நாகரிகம்" என்றாய்
மனிதனாய் பிறந்து
மிருகமாய் ஒரு வாழ்கை
விழிக்க இது தருணம்
விழி... எழு...
காரணம்
நீ செய்வது (அ) நாகரிகம்"

பி.கு: யாரையும் குறை சொல்லவோ, பிரரது சுகந்திரம் தவறென்றோ நான் சொல்லவில்லை... கலாச்சாரத்திற்கும் இயற்கைக்கும் முரண்பட்டு செயல் பட வேண்டாம் என்பது என் கருத்து.

கொஞ்சம் குழப்பி இருக்கேன்னு தோனுது.... இன்னும் எளிமையாக சொல்லி இருக்கலாம். குழம்பினவர்கள் மண்ணிக்கவும்.

24 comments:

  1. //காமத்திற்கும் எவ்வளவு வித்யாசம் இருக்கிறதோ...அவ்வளவு வித்யாசம் ரசனைக்கும், இச்சைக்கும் இடையில் இருக்கிறது. //

    //"மானுடமே எதை நோக்கி உன் பயணம்
    செய்ய வேண்டியத செய்ய மறந்தாய்
    செய்ய கூடாததை
    செய்துக் காட்டினாய்
    விளக்கம் கேட்டால்
    இது "நாகரிகம்" என்றாய்
    மனிதனாய் பிறந்து
    மிருகமாய் ஒரு வாழ்கை
    விழிக்க இது தருணம்
    விழி... எழு...
    காரணம்
    நீ செய்வது (அ) நாகரிகம்"//

    கதை அருமை அருள். கவிதையான கருத்துக்கள். வாழ்த்துக்கள் அருள் தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. // புதியவன் said...
    கதை அருமை அருள். கவிதையான கருத்துக்கள். வாழ்த்துக்கள் அருள் தொடர்ந்து எழுதுங்கள்.//


    உங்கள் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி புதியவன்.

    ReplyDelete
  3. // ஸ்ரீமதி said...
    அருமை :)) //


    வழக்கமா பக்கம் பக்கமா பின்னோட்டம் எழுதுற நீங்க... ஒத்த வார்த்தையில ஒத்து ஊதறது... உங்களுக்கு அழகில்லை.

    ஏதாவது பாத்து பண்ணுங்க...

    நன்றி ஸ்ரீமதி.

    ReplyDelete
  4. //"அடுப்படியில் இருந்த பெண்கள் எல்லாம்

    அடிமை விலங்கை உடைத் எரிந்து

    சுயமாய் இடுக்கை இடும் காலம் வந்ததில்

    பெரு மகிழ்ச்சி எனக்கு"

    //

    நன்றாக எழுதி உள்ளீர்.. குழப்பின மாதிரி எனக்கு தெரியலை.. இன்னும் ஏதேதோ சொல்லணும்னு நினைக்கறேன் ஆனா வார்த்தைகள் கிடைக்க மாட்டேங்குது.

    ReplyDelete
  5. //அருள் said...
    // ஸ்ரீமதி said...
    அருமை :)) //


    வழக்கமா பக்கம் பக்கமா பின்னோட்டம் எழுதுற நீங்க... ஒத்த வார்த்தையில ஒத்து ஊதறது... உங்களுக்கு அழகில்லை.

    ஏதாவது பாத்து பண்ணுங்க...

    நன்றி ஸ்ரீமதி.//

    சும்மா கும்மிக்கு தாங்க அப்படி எழுதுவேன்.. :)) மத்தபடி நல்லா இருந்தா ஒரு வார்த்தை தான் வரும்.. அப்பறமும் எனக்கு விமர்சனம் எல்லாம் பண்ண வராது.. அதான் அப்படி ஒரு பின்னூட்டம்.. :)) சரி இனிமே நிறைய எழுதறேன்.. :)))))

    ReplyDelete
  6. // PoornimaSaran said...
    நன்றாக எழுதி உள்ளீர்.. குழப்பின மாதிரி எனக்கு தெரியலை.. இன்னும் ஏதேதோ சொல்லணும்னு நினைக்கறேன் ஆனா வார்த்தைகள் கிடைக்க மாட்டேங்குது.//


    சகோ... உன்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி... அப்பப்ப வந்து போங்க...

    ReplyDelete
  7. அருள் said...
    // ஸ்ரீமதி said...

    சும்மா கும்மிக்கு தாங்க அப்படி எழுதுவேன்.. :)) மத்தபடி நல்லா இருந்தா ஒரு வார்த்தை தான் வரும்.. அப்பறமும் எனக்கு விமர்சனம் எல்லாம் பண்ண வராது.. அதான் அப்படி ஒரு பின்னூட்டம்.. :)) சரி இனிமே நிறைய எழுதறேன்.. :))))) //

    உங்கள் அன்பிற்கு... நன்றி ஸ்ரீமதி.

    ReplyDelete
  8. \\ரசனைக்கு அப்பாற்பட்ட மிருகப் பார்வை தவறானது.காதலுக்கும், காமத்திற்கும் எவ்வளவு வித்யாசம் இருக்கிறதோ...அவ்வளவு வித்யாசம் ரசனைக்கும், இச்சைக்கும் இடையில் இருக்கிறது. இதை என்று உணரப் போகிறோம். ஆதலால் என் இன வர்கமே...(ஒரு சில ஆண் வர்கமே) உன் பார்வையை மாற்று.\\

    நம் பார்வையை மாற்றுவோம்

    ReplyDelete
  9. \\உலக விஞ்ஞானம் ஆயிரம் மடங்கு உயர்ந்தாலும், வாழ்க்கை தரம் பல்லாயிரம் கட்டங்கள் கடந்தாலும்... பெண்மைக்கான அழகு வர்ணனைக்கும் மேலான ஒன்று.\\

    அழகு.

    ReplyDelete
  10. \\இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வித்யாவிற்கு... மணி 12.58 ஆனது கூட கவனிக்கத் தோன்றாமல் தன் அறியாமையை நினைத்து கடிந்துக் கொண்டே அவரை நெருக்கிக் கேட்டாள்...

    "ஏன் சார் இங்கிருந்து உங்களுக்கு எங்க போகணும்"\\

    ம்ம்ம்... தவறென உணர்ந்து திருந்தும் உள்ளம் - அருமை

    ReplyDelete
  11. புகைப்பட கண்கள் ஏதோ சொல்ல வர்ற மாதிரி இருக்குல்ல???

    ReplyDelete
  12. தங்கள் கதையும் கதைக்கருவும் கதைமுடிவும் அருமை அருள்... வித்தியாசமான சிந்தனை. இருசாரார் மீதும் தவறு இருக்கிறது என்பதை அழகாய் எடுத்துக்காட்டியுள்ளீர்கள். எனக்கும் உங்க கருத்துக்களில் குழப்பம் இருப்பதாக தோன்றவில்லை அருள். நன்றாகவே புரிகிறது:))) வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. // அதிரை ஜமால் said...

    நம் பார்வையை மாற்றுவோம் //

    வணக்கம் தோழரே...
    என்ன டா நம்ம பக்கம் எட்டி கூட பாக்க மாட்டேங்கிறார்னு யோசிச்சேன்... வந்துட்டிக.

    உங்கள் வரவால் என் வலை பூவிற்கு பெருமை சேர்ந்தது...

    அப்புறம்... அது என்ன "நம் பார்வையை மாற்றுவோம்"
    கேப்புல களாய்கிறிகளோ... லைட்டா சந்தேகம் வருது...

    ReplyDelete
  14. // அதிரை ஜமால் said...
    புகைப்பட கண்கள் ஏதோ சொல்ல வர்ற மாதிரி இருக்குல்ல??? //

    பேசினால் தான் பெண்களுக்கும்... கண்களுக்கும் அழகு.

    என்ன matterன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுக்க அண்ணே.

    ReplyDelete
  15. // reena said...
    தங்கள் கதையும் கதைக்கருவும் கதைமுடிவும் அருமை அருள்... வித்தியாசமான சிந்தனை. இருசாரார் மீதும் தவறு இருக்கிறது என்பதை அழகாய் எடுத்துக்காட்டியுள்ளீர்கள். எனக்கும் உங்க கருத்துக்களில் குழப்பம் இருப்பதாக தோன்றவில்லை அருள். நன்றாகவே புரிகிறது:))) வாழ்த்துக்கள் //


    உங்கள் முதல் வருகைக்கும் தருகைக்கும் நன்றி ரீனா...

    நேரம் கிடைக்கும் பொது வந்து போங்க... :-)

    ReplyDelete
  16. சரியாய் சொன்னீங்க அருள்.
    ஆண்களுக்கு மட்டுமில்லாமல் பெண்களுக்கும் நீங்க சொன்ன கருத்து ரொம்ப பொருத்தம்

    ReplyDelete
  17. \\அருள் said...
    // அதிரை ஜமால் said...

    நம் பார்வையை மாற்றுவோம் //

    வணக்கம் தோழரே...
    என்ன டா நம்ம பக்கம் எட்டி கூட பாக்க மாட்டேங்கிறார்னு யோசிச்சேன்... வந்துட்டிக.

    \\உங்கள் வரவால் என் வலை பூவிற்கு பெருமை சேர்ந்தது...\\

    ரொம்ப நன்றிங்கன்னா

    \\அப்புறம்... அது என்ன "நம் பார்வையை மாற்றுவோம்"
    கேப்புல களாய்கிறிகளோ... லைட்டா சந்தேகம் வருது...\\

    நம் பார்வைன்னு சொன்னது ஆண்கள் பார்வை

    ReplyDelete
  18. \\அருள் said...
    // அதிரை ஜமால் said...

    நம் பார்வையை மாற்றுவோம் //

    வணக்கம் தோழரே...
    என்ன டா நம்ம பக்கம் எட்டி கூட பாக்க மாட்டேங்கிறார்னு யோசிச்சேன்... வந்துட்டிக.

    \\உங்கள் வரவால் என் வலை பூவிற்கு பெருமை சேர்ந்தது...\\

    ரொம்ப நன்றிங்கன்னா

    \\அப்புறம்... அது என்ன "நம் பார்வையை மாற்றுவோம்" கேப்புல களாய்கிறிகளோ... லைட்டா சந்தேகம் வருது...\\

    நம் பார்வைன்னு சொன்னது ஆண்கள் பார்வையை

    ReplyDelete
  19. \\அருள் said...
    // அதிரை ஜமால் said...
    புகைப்பட கண்கள் ஏதோ சொல்ல வர்ற மாதிரி இருக்குல்ல??? //

    பேசினால் தான் பெண்களுக்கும்... கண்களுக்கும் அழகு.

    என்ன matterன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுக்க அண்ணே.\\

    கேட்டேன் அருள் - அவங்க சொன்ன சேதி உங்கள்ட்ட சொல்லும் படியா இல்லை.

    (எங்கிருந்து வந்தாயடா என்னை பாடுபடுத்த) அப்படீன்னு என்னை கேட்கிறாங்க அருள்.

    என்னைப்பார்த்தா பாவாமாயில்லை (இல்லை டா)

    ReplyDelete
  20. அருள் சீக்கிரம் வாங்க

    புதுப்பதிவுகளுக்கான எதிர்ப்பார்ப்போட நிறைய பேர் காத்துக்கிட்டிருக்கோம்.

    ReplyDelete
  21. காணவில்லை என்று அறிவிப்பு கொடுக்கும்முன் வந்துவிடுங்கள் சகோ ...

    ReplyDelete
  22. என்ன சகோ! எங்கே காணவில்லை தங்களை.


    வெகு அறிதாக சில இடங்களில் உங்களின் பின்னூட்டம் மட்டும் பார்க்கிறேன்.

    சீக்கிரம் வாருங்கள்.

    ReplyDelete

மறுமொழிகள்