Friday, November 14, 2008

"அம்மா" உச்சரிக்காத வார்த்தை

அம்மா !
இது வரை நான் உச்சரிக்காத வார்த்தை
பிறர் அழைக்க கேட்டிருக்கிறேன்
ஆனால் நான் அழைத்ததில்லை
எங்கிருக்கிறாய் நீ ?
பத்து மாதம் எதற்காக சுமந்தாய்?
என் முகம் பார்த்ததுண்டா ?
என் ஸ்பரிசம் உணர்ததுண்டா ?
நீ வெறுக்க நான் செய்த தவறென்ன ?
என் தொப்புள் கோடி
அறுக்கும் முன்னமே
நம் உறவுக்கொடி
அறுக்கப்பட்டது
விளைவு ...
நான் வீதியில் அனாதையாய்
பெண்ணாய் பிறந்தது யார் செய்த குற்றம் ?
எ முண்டாசுக் கவிஞ்சனே
மீண்டும் ஒரு ஜன்மம் எடு...
எங்களின் உரிமைக்காக!
குறிப்பு : தென் மாவட்டங்களில் கடந்த 4 வருடங்களில் 300 பெண் குழந்தைகள் தங்களுக்கு வேண்டாம் என்று பெற்றோர் நிராகரித்து அரசு தொட்டிலில் போட்டதாக செய்தி.

6 comments:

  1. "இது வரை நான் உச்சரிக்காத வார்த்தை
    பிறர் அழைக்க கேட்டிருக்கிறேன்
    ஆனால் நான் அழைத்ததில்லை
    எங்கிருக்கிறாய் நீ ....."

    கவிதை நன்று... ஏக்கங்களைச் சொல்ல வரும் வரிகள் அருமை... ஏதோ ஒரு சோகம் என்னையும் வருடி செல்கிறது.. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!...

    ReplyDelete
  2. if u dont mind ... plss remove word verification. thank you.

    ReplyDelete
  3. //ரகசிய சிநேகிதி said...
    "இது வரை நான் உச்சரிக்காத வார்த்தை
    பிறர் அழைக்க கேட்டிருக்கிறேன்
    ஆனால் நான் அழைத்ததில்லை
    எங்கிருக்கிறாய் நீ ....."

    கவிதை நன்று... ஏக்கங்களைச் சொல்ல வரும் வரிகள் அருமை... ஏதோ ஒரு சோகம் என்னையும் வருடி செல்கிறது.. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!...//


    உங்கள் வாழ்த்திற்கு நன்றி...

    மீண்டும் வருக!

    ReplyDelete
  4. சிந்திக்க வைக்கும் கவிதை......அருமை :)

    ReplyDelete
  5. Divya said...
    சிந்திக்க வைக்கும் கவிதை......அருமை :)

    திவ்யாவின் வருகைக்கும்... தருகைக்கும்..நன்றி

    ReplyDelete

மறுமொழிகள்