Wednesday, November 19, 2008

"கவிதை எழுத ஆசை"


கவிதை எழுத முயற்சித்தேன்

"கவிதை" எழுதினேன்

ஆனால் கவிஞ்சன் ஆகவில்லை

காரணம் இதுவரை

நான் காதலிக்கவில்லை...



காதலித்து பார்

கவி கம்பனும் , கண்ணதாசனும்

உன் வீட்டு முற்றத்தில்

வரிசையிட்டு காத்திருப்பர்...



எழுத முயற்சித்து தோற்றுப் போனேன்

காதலே என்னையும் தத்தேடுத்துக்கொள்

எனக்கும் கவிதை எழுத ஆசை... கவிஞ்சனாக





20 comments:

  1. முதல்ல கவிதை எழுத தேவை காதல் மட்டுமே. காதலி இல்லை. காதல் இருந்தால் கவிதை வரும். காதல் பெண்ணிடம் மட்டும் வரவேண்டும் என்று இல்லை! முயற்சி செய்யுங்கள்.

    இதுவே ஒரு அழகிய கவிதை மாதிரி தான் இருக்கு.
    நன்று தோழா.

    ReplyDelete
  2. மறுமொழி காணவில்லையோ?

    ReplyDelete
  3. கவிதை முயற்சி அருமை!!

    காதலிச்சா மட்டும்தான் கவிதை எழுத முடியும்னு இல்லீங்க அருள்:)))

    தொடர்து கவிதை எழுத என் வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  4. அப்படினா நானும் உங்க லிஸ் தானுங்க...

    ReplyDelete
  5. //எழுத முயற்சித்து தோற்றுப் போனேன்

    காதலே என்னையும் தத்தேடுத்துக்கொள்//

    என்ன அருள் இதுக்கெல்லாம் போய் ஃபீல் பண்ணிக்கிட்டு
    காதல் உங்கள தத்தெடுக்களைன்னா என்ன நீங்க காதலை தத்தெடுத்துக் கொள்ளுங்க கற்பனையிலாவது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் அருள்.

    ReplyDelete
  6. //காண்டீபன் said...
    முதல்ல கவிதை எழுத தேவை காதல் மட்டுமே. காதலி இல்லை. காதல் இருந்தால் கவிதை வரும். காதல் பெண்ணிடம் மட்டும் வரவேண்டும் என்று இல்லை! முயற்சி செய்யுங்கள்.

    இதுவே ஒரு அழகிய கவிதை மாதிரி தான் இருக்கு.
    நன்று தோழா.//

    நன்றி காண்டீபன்...
    தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  7. //Divya said...
    கவிதை முயற்சி அருமை!!

    காதலிச்சா மட்டும்தான் கவிதை எழுத முடியும்னு இல்லீங்க அருள்:)))

    தொடர்து கவிதை எழுத என் வாழ்த்துக்கள்!!!!//

    காதலித்தவனுக்கு கல்லும் கற்கண்டாகும்னு எங்கோ படிச்ச நியாபகம்...

    'சும்மா ஒரு பதிப்பை போடலாமேனு போட்டதுதான்'

    உங்கள் வருகைக்கு நன்றி திவ்யா.
    தொடர்ந்து வருக.

    ReplyDelete
  8. //VIKNESHWARAN said...
    அப்படினா நானும் உங்க லிஸ் தானுங்க...//

    அப்ப மிக விரைவில் நமக்கான சங்கம் தொடங்குவோம்!

    உங்கள் வருகைக்கு நன்றி சகோ. மீண்டும் வருக.

    ReplyDelete
  9. // புதியவன் said...
    என்ன அருள் இதுக்கெல்லாம் போய் ஃபீல் பண்ணிக்கிட்டு
    காதல் உங்கள தத்தெடுக்களைன்னா என்ன நீங்க காதலை தத்தெடுத்துக் கொள்ளுங்க கற்பனையிலாவது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் அருள்.//

    "எதையாவது நேசி... உலகம் அழகாக தெரியும்"
    "காதலை நேசி... பிறருக்கு நி அழகாகத் தெரிவாய்"
    காதலை நேசிக்க பழகுகிறேன்..

    நன்றி புதியவன்... மீண்டும் வருக.

    ReplyDelete
  10. //காதலித்து பார்

    கவி கம்பனும் , கண்ணதாசனும்

    உன் வீட்டு முற்றத்தில்

    வரிசையிட்டு காத்திருப்பர்...//


    அம்மா, அப்பா,Friends., இப்படி யாரை நேசிச்சாலும் கவிதை வரும்..
    தொடர்து கவிதை எழுத என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. யாரோ உங்க கிட்ட தப்பு தப்பா சொல்லிருக்காங்க அதெல்லாம் ச்சின்னப்புள்ளத் தனமா நம்பாதீங்க.. 'சித்திரமும் கைபழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்;' அதனால இப்படியே எழுத முயற்சி பண்ணுங்க.. இதுவும் நல்லாத்தான் இருக்கு.. கவிதை நிச்சயம் உங்கள் வசப்படும்.. வாழ்த்துகள்.. :))

    ReplyDelete
  12. // ஸ்ரீமதி said...
    யாரோ உங்க கிட்ட தப்பு தப்பா சொல்லிருக்காங்க அதெல்லாம் ச்சின்னப்புள்ளத் தனமா நம்பாதீங்க.. 'சித்திரமும் கைபழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்;' அதனால இப்படியே எழுத முயற்சி பண்ணுங்க.. இதுவும் நல்லாத்தான் இருக்கு.. கவிதை நிச்சயம் உங்கள் வசப்படும்.. வாழ்த்துகள்.. :))//

    ஐயோ ஸ்ரீமதி நீங்க வேற..

    'சும்மா ஒரு பதிப்பை போடலாமேனு போட்டதுதான்'

    உங்கள் அன்புக்கும், ஊக்கதிறக்கும் நன்றி தோழி.

    ReplyDelete
  13. //PoornimaSaran said...

    அம்மா, அப்பா,Friends., இப்படி யாரை நேசிச்சாலும் கவிதை வரும்..
    தொடர்து கவிதை எழுத என் வாழ்த்துக்கள்..//


    நீங்க சொல்றது உண்மை தான் ...

    நேசிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கு..

    'சும்மா ஒரு பதிப்பை போடலாமேனு போட்டதுதான்'

    இந்த மேட்டர் இவ்வளவு சிரியஸ் ஆகும்னு எதிர் பாக்கல..

    பட்... நல்ல ரெஸ்பான்ஸ்.

    உங்கள் வருகைக்கும், ஊக்கதிறக்கும் நன்றி.

    மீண்டும் மீண்டும் வருக..

    ReplyDelete
  14. கவிதை முயற்சி நன்று அருள்:)

    ReplyDelete
  15. //ப்ரதீபா said...
    கவிதை முயற்சி நன்று அருள்:)//


    வருக... பிரதிபா.
    வந்தமைக்கும்... உங்கள் கருத்தை தந்தமைக்கும் நன்றி.
    மீண்டும் மீண்டும் வருக.

    ReplyDelete
  16. கவிதைகள் கவிஞர்களின் உணர்ச்சிகளின் குவியல் தானே!
    காதல் இன்னும்ப அதிகம உணர்ச்சி பிராவகத்தை உண்டு பண்ணும் என்பதில் சந்தேகம் இல்லை ,..அதனால் உங்கள் கவிதையின் கூற்றை ஏற்கிறேன் :))

    நீங்கள் ரசிக்கும், உங்கள் மனதைப் பாதிக்கும் எல்லாவற்றையும் கவிதையில்ச் சொல்லுங்கள் அதன் சுகமே தனி...காத்திருக்கிறோம் உங்களின் கவிதை வாசிக்க

    ReplyDelete
  17. அருள்!காதல் உங்களை தத்தெடுத்துக் கொண்டதோ இல்லையோ கவிதை தங்களை தத்தெடுத்துக் கொண்டு விட்டது. தொடருங்கள் தங்கள் பணியை:))) வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. // reena said...
    அருள்!காதல் உங்களை தத்தெடுத்துக் கொண்டதோ இல்லையோ கவிதை தங்களை தத்தெடுத்துக் கொண்டு விட்டது. தொடருங்கள் தங்கள் பணியை:))) வாழ்த்துக்கள் //

    நன்றி ரீனா... உங்களுடைய வாழ்த்துக்களும் ஊக்கமும் தொடர்ந்து எழுத என்னை வழி நடத்தும் என்று நப்புகிறேன்.

    ReplyDelete
  19. Wow, kavithai elutha aasai enre oru kavithaiyaa. really nice. u r already kavignar aayiddinga. Appuramenna! :)

    ReplyDelete

மறுமொழிகள்