Saturday, November 15, 2008

" விடியலுக்காக காத்திருக்கிறோம் "

இடம்: ராமேஸ்வரம் ( அகதிகள் முகாம் )

குறிப்பு : ரமேஸ்வரத்திகும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள தூரம் 31 மையில்.

______________________________________

என்று மாறும் இந்த நிலை...


அடிமை இல்லை ஏனினும்

அகதியாய் ஒரு வாழ்க்கை

இழக்க ஒன்றும் இல்லை

உயிரை தவிர...



உயிரே விட்டாலும்

எங்கள் உடல் கடலில் வீசி எரியப்படட்டும்

அப்படியேனும் சமாதானமாய்

நாங்கள் ஈழக் கரை சேர்வோம்



கன்னி வெடிகளும்

ராக்கெட் குண்டுகளும்

அலறல் சத்தங்களும்

கேட்டு வந்த எங்களுக்கு...

மொட்டுக்கள் பூத்தாலும்

கலவரமாய் தான் கேட்கின்றன



இங்கு ஆயிரம் சூரியன் உதித்தாலும்

எங்கள் விடியல் இங்கிருந்து

31 மையில் தொலைவில்

காத்திருக்கிறோம் விடியலுக்காக



என்று மாறும் இந்த நிலை ...

12 comments:

  1. மாற்றம் என்பதே மானித தத்துவம் தோழரே.. மாற்றம் வரும்.. நாம் முனைந்தால்.

    ReplyDelete
  2. மனம் கனக்கிறது :-(

    ReplyDelete
  3. //காண்டீபன் said...
    மாற்றம் என்பதே மானித தத்துவம் தோழரே.. மாற்றம் வரும்.. நாம் முனைந்தால்.//


    வருகைக்கு நன்றி காண்டீபன்...
    மாற்றம் வரும் என்ற நப்பிக்கை உடன்... :-)

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. //புனிதா said...
    மனம் கனக்கிறது :-(//

    உண்மை தான் தோழி..
    நிஜமான உணர்வுகள் கனக்க தான் செய்யும்.

    ReplyDelete
  6. //ஸ்ரீமதி said...

    :(( //

    ஸ்ரீமதிக்கு இந்த கிறுக்கல் பிடிக்காமல் போனதற்கு வருந்துகிறேன்.
    எதோ என்னால் முடிந்ததை கிருக்கிஇருகிறேன்.
    மீண்டும் வருக.

    ReplyDelete
  7. //உயிரே விட்டாலும்

    எங்கள் உடல் கடலில் வீசி எரியப்படட்டும்

    அப்படியேனும் சமாதானமாய்

    நாங்கள் ஈழக் கரை சேர்வோம்

    //

    :’(

    ReplyDelete
  8. :(( Endru thaniyum intha suthanthira thaagam??

    kavithai nalla irukku Arul...

    konjam spelling mistakes.. atha mattum aduththa tahdava proof read pannidunga :))

    ReplyDelete
  9. //அடிமை இல்லை ஏனினும்

    அகதியாய் ஒரு வாழ்க்கை

    இழக்க ஒன்றும் இல்லை

    உயிரை தவிர...//

    உணர்வுப் பூர்வமாக எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  10. //அருள் said...
    //ஸ்ரீமதி said...

    :(( //

    ஸ்ரீமதிக்கு இந்த கிறுக்கல் பிடிக்காமல் போனதற்கு வருந்துகிறேன்.
    எதோ என்னால் முடிந்ததை கிருக்கிஇருகிறேன்.
    மீண்டும் வருக.//

    அச்சச்சோ அது கவிதைல இருந்த சோகத்துக்காக போட்ட ஸ்மைலி.. உங்க கவிதை பிடிக்காம போட்டதில்ல.. கவிதை நல்லா இருக்கு... :))

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்! மனம் கனக்கச்செய்யும் கவிதை அருள்... சில சமயம் விடியல்களை ஏற்படுத்த முடியாமல் சூரியனும் தோற்றுத்தான் போகிறது. நம்முடன் அதுவும் காத்துக்கொண்டிருக்கிறது ஈழத்தின் விடியலுக்காய்...

    ReplyDelete

மறுமொழிகள்